எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்: அதிர வைக்கும் கள ஆய்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுவது இந்து நாளிதழ்(ஆங்கிலம்) நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் சிலவற்றில் 'தி இந்து' நாளிதழின் செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாக சென்ற கள ஆய்வு செய்தனர். அதில் 5,000க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படும் பண்ணை ஒன்றிற்கு சென்றபோது, வழக்கமான கோழி தீவனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் மஞ்சள் நிறத்தில் திரவம் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது.

அதுபற்றி பண்ணையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், ''வழக்கமாக கோழிகளுக்கு கொடுக்கப்படும் உணவு மற்றும் தண்ணீருடன் நோய் தடுப்புக்காக இந்த மருந்து வழங்கப்படுகிறது. எங்கள் மேலதிகாரிகள் இந்த மருந்தை கலந்து தருவார்கள். அதை எவ்வளவு கலக்க வேண்டும். எப்படி கலக்க வேண்டும் என்ற விவரங்கள் அவர்களுக்கே தெரியம்'' எனக் கூறினர்.

அதன்படி கோழிகளுக்கு அந்த மருந்து தரப்படுகிறது. ஐந்து வாரங்களுக்கு உணவுடன் சேர்த்து இந்த நோய் தடுப்பு மருந்தும் வழங்கப்படுகிறது. இந்த மருந்துகள் வழங்கப்படுவது கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்காக என கூறப்படுகிறது. கோழிகள் நோய் தாக்கி உயிரிழக்காமல் இருப்பதற்காக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இவை கோழிகளின் எடை அதிகரித்து, கூடுதல் விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கொடுக்கப்படுகிறது.

மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்

இந்த மருந்தின் யெபர் கொலிஸ்டின். நோயாளிகளுக்கு பலவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டும் நோய் தொற்றுக்கான தீர்வு கிடைக்கவில்லை எனில் இறுதியாகவே, இந்த மருந்தை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்குகின்றனர். உலக அளவில் இது மிகவும் அபாயகரமான சூழலில் வேறு வழியின்றி வழங்கும் மருந்து என்று உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை வகைப்படுத்தியுள்ளது.

மிகவும் கட்டுப்பாட்டுடன் மட்டுமே இந்த மருந்தை வழங்க முடியும். ஆனால் பண்ணைகளில் சர்வசாதாரணமாக இந்த மருந்து எடையை கூட்டுவதற்காக வழங்கப்படுகிறது. கோழிப்பண்ணைகளில் பயன்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான டன்கள் எடை கொண்ட கொலிஸ்டின் மருந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா, வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எடை கூட்டுவதற்கான மருந்து

ஐந்து கால்நடை மருந்து விற்பனை நிறுவனங்கள் இந்தியாவில் கொலிஸ்டின் மருந்தை எடை கூட்டும் மருந்து எனக்கூறி விற்பனை செய்து வருவதை இந்து செய்தியாளர்கள் குழு உறுதி செய்துள்ளது. இதில் ஒன்று வெங்கி. கால்நடைகளுக்கான மருந்துகள் மட்டுமின்றி கோழிகளையும் உற்பத்தி செய்கிறது. கேஎப்சி, மெக்டொனால்டு, பீஸா ஹட், டோமினோஸ் உள்ளிட்ட பல நிறுனங்களுக்கும் கோழி இறைச்சியை இந்நிறுவனம் சப்ளை செய்து வருகிறது.

வெங்கி நிறுவனம் 2010-ல் இங்கிலாந்தின் கால்பந்து கிளப் பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணியை வாங்கியது. இங்கிலாந்தில் கால்பந்தாட்ட கிளப்புகளில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படுவதாக கூறி வெங்கி விளம்பரமும் செய்துள்ளது. வெங்கி விற்பனை செய்யும் கொலிஸ்டின் அடங்கிய பார்சல்களில் கோழிகள் மகிழ்ச்சியுடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில், கோழியின் 'உடல் எடை அதிகரிக்கும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இந்த வெங்கி நிறுவனம் தான் இந்தியாவில் விவசாயிகளுக்கு பயிர் விளைச்சளுக்கு உகந்தது என்று விளம்பரப்படுத்தி விற்று வருகிறது.

ஒரு டன் கோழி தீவனத்துடன், வெங்கி நிறுவனத்தின் கோலிஸ் வி 50 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எந்த மருத்துவரின் பரிந்துரை சீட்டும் இல்லாமல் கடைகளில் எளிதாக வாங்க முடிகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு, அதனை சோதனை செய்து மருந்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் விற்கப்படுகிறது.

 

 

நிறுவனம் விளக்கம்

ஆனால் இதுகுறித்து வெங்கி நிறுவனம் கூறுகையில், ''இந்தியாவில் எந்த சட்ட விதியையும் நாங்கள் மீறவில்லை. கோழிகளுக்கும் ஆன்டிபாயாடிக் மருந்தாகவே வழங்கப்படுகிறது. சிலர் வேறு காரணங்களுக்காக சிறிதளவு வழங்கி இருக்கலாம். ஆனால் இந்த மருந்தை விற்பனை செய்ய இந்தியாவில் தடை ஏதும் இல்லை. இந்திய அரசு அனுமதித்துள்ள சட்டவிதிகளின் படியே இந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது'' என விளக்கம் அளித்துள்ள்ளது.

இதுபோலேவே  வெங்கி நிறுவனம் கொலிஸ்டின் மருந்தை ஆன்டிபாயாக் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என மெக்டொனால்டு, கேஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களும் விளக்கம் அளித்துள்ளன. வரும்காலத்தில் இந்த மருந்து பயன்பாடு இல்லாத வகையில் குறைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளன.

நிபுணர்கள் என்ன சொல்கிறர்கள்?

இதுகுறித்து கொலிஸ்டினை, தனது சீன நண்பருடன் சேர்ந்து கண்டறிந்த கார்டிப் பல்லைக்கழக நுண்ணுரியல் துறை பேராசிரியர் டிமோதி வால்ஷ் கூறுகையில், ''இந்தியாவில் இதுபோன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் சர்வ சாதாரணமாக கிடைப்பது வருத்தமளிக்கிறது. கோழிப்பண்ணைகளில் இது பயன்படுத்துவது பைத்தியகாரத்தனமானது. வேறு வழியில்லாத சூழலில் மட்டுமே இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும்'' எனக் கூறியுள்ளார். வேறு பல ஆராய்ச்சியாளர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள் அனைத்தும் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவது குறித்தும் உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது.

கொலிஸ்டின் மட்டுமின்றி உடல் எடையை காரணம் காட்டி விற்கப்படும் ஆன்டிபாயடிக் மருந்துகள் உலகஅளவில் தடை விதிக்க வேண்டும் என்கிறார் இங்கிலாந்து தலைமை மருந்துவ அதிகாரி டேம் சாலி டேவிஸ். கோழி இறைச்சியில் ஆன்டிபாயாடிக் இருப்பதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஆனால், இது சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட தர நிர்ணய அளவில் மட்டுமே இருப்பதாக இந்திய விவசாய அமைச்சகம் கூறுகிறது.

கோழிகறி விற்பனை உயர்வு

இந்தியாவில் கோழி கறி நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2003 - 2013-ம் வரையிலான பத்தாண்டில் இந்தியாவில் கோழிக்கறி விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஆட்டுக்கறியின் விலை மிக அதிகமாக இருப்பதால், கோழிக்கறியை வாங்கி சாப்பிட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மற்ற நாடுகளில் குறைந்த விலை இறைச்சியாக கருதப்படும் பன்றி இறைச்சியை மக்கள் வாங்கி சாப்பிடுவதில்லை. எனவே மக்கள் வாங்கி சாப்பிடும் விலை என்பதால் கோழிக்கறி விற்பனை அதிகரித்து வருகிறது.

ராகுல் மீஸரகண்டா

மேட்லன் டேவிஸ்

 

தமிழிலில் : நெல்லை ஜெனா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்