திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு

By என்.மகேஷ் குமார்

திருமலையில் ஏழுமலையானை இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தரிசனம் செய்தார். அப்போது அவரிடம் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் கேட்டதற்கு பதில் கூற மறுத்து விட்டார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நேற்று காலை திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள், தரிசன ஏற்பாடுகளை செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். இதனை தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவரிடம், நடிகர் ரஜினி அரசியல், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு குறித்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார் இளையராஜா. இவரைக் காண திருமலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில், நேற்று காலையில் விஐபி பிரேக் நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கே. ஸ்ரீகாந்த் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதன் பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும், இதர ஒரு நாள் தொடரிலும், டி-20 தொடரிடலும் இந்திய அணி வெல்லும்” என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்