உ.பி.யில் ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சம்பவம்: சிறார் சீர்திருத்தப் பள்ளியில் மாணவி

By செய்திப்பிரிவு

லக்னோவில் உள்ள பள்ளியில் படித்த ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6-ம் வகுப்பு மாணவி சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரைட்லாண்ட் பள்ளியில் கடந்த 16-ம் தேதி ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை, அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி கழிப்பறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பள்ளி விடுமுறை விடுவதற்காக அந்த மாணவி கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பள்ளியில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிககப்பட்டார்.

 மேலும், தாக்கதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கத்தியால் குத்திய 6-ம் வகுப்பு மாணவி சிறார்  சீர்திருத்த நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். அந்த மாணவியை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 இதைத் தொடர்ந்து சீர்திருத்தப் பள்ளிக்கு காவல்துறையினர் மாணவியை அனுப்பி வைத்தனர். அந்தப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் சென்று ஆய்வு நடத்தியதுடன், பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்