கிம் ஜோங் உன்னின் அமெரிக்க எதிர்ப்பைப் பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன்

By பிடிஐ

அமெரிக்காவைத் தொடர்ந்து எதிர்த்து வரும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை கம்யூனிஸ்ட் தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.

கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுவில் புதன்கிழமையன்று பேசிய பினராயி விஜயன், ''ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து வருவதில் வட கொரியா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

பொதுவான சீனா ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராகப் போராடுவதில் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்று ஒரு விமர்சனம் உண்டு.

அதேவேளையில் வட கொரியா, வலுவான அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கையில் எடுத்திருக்கிறது. அதற்கு எதிரான அமெரிக்கா அளிக்கும் அழுத்தங்களையும் வெற்றிகரமாக வடகொரியா கையாள்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது புத்தாண்டு கொண்டாட்ட உரையில் வடகொரிய அதிபர் கிம் பேசும்போது, "அணுஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணு ஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் என்னுடைய மேஜையின் மீது தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடியாக "என்னிடமும் அணுஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் உள்ளது. அது வடகொரிய பொத்தானைவிடப் பெரியது, சக்தி வாய்ந்தது என்று அந்நாட்டு அதிபர் கிம்மிடம் யாராவது கூறுங்கள்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்