உத்தரபிரதேசத்தில் முதல்முறையாக ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில்அசைவ உணவுக்குத் தடை

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்முறையாக அசைவ உணவு வகைகள் இடம்பெறாமல் போய்விட்டன.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சைவ உணவுப் பிரியர் என்பதால், ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அசைவ உணவு வகைகளுக்கு முதல்முறையாக தடை விதிகக்ப்பட்டது.

உத்தரபிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டம் நேற்று முன்தினம் தலைநகர் லக்னோவில் நடைபெற்றது.

அப்போது ஏற்பாடு செய்யப்பட்ட மதிய, இரவு விருந்தில் அசைவ உணவு வகைகள் இடம்பெறவில்லை. முதல்முறையாக அசைவ உணவுகள் இந்த வகைக் கூட்டத்தில் இடம்பெறாமல் போய்விட்டன.

இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த ஆண்டு ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கூட அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஆனால் இந்த முறை அசைவ உணவு வகைகள் இடம்பெறவில்லை. இதற்கு முந்தைய அரசுகள் இப்படிச் செய்ததில்லை ” என்றார்.

மதிய, இரவு உணவின்போது ஷாகி கோப்டா, தால் மக்கானி, பன்னீர் டிக்கா, அரிசி உணவு வகைகள், ஹன்டி பன்னீர், குலாப் ஜாமூன், ஹல்வா போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன. - ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 mins ago

ஜோதிடம்

20 mins ago

ஜோதிடம்

33 mins ago

வாழ்வியல்

38 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

54 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்