சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி ஏன்?-இமாச்சல பிரதேசத்தில் ராகுல் காந்தி ஆய்வு

By செய்திப்பிரிவு

சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இமாச்சல் பிரதேசத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

ராகுல் காந்தி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்த நிலையில்தான் இமாச்சல் பிரதேசம், குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. இந்த 2 மாநிங்களிலும் காங்கிரஸ் தோல்வி கண்டது. இருப்பினும் கடந்த தேர்தலைக் காட்டிலும் குஜராத்தில் இந்த முறை கூடுதல் இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

இது கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் இமாச்சலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. அங்கு மொத்தம் 68 இடங்களில் காங்கிரஸ் 20 இடங்களில் மட்டுமே வென்றது. 44 இடங்களில் வெற்றி பெற்று பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ராகுல் காந்தி இமாச்சல் பிரதேசத்துக்கு நேற்று வந்தார். இந்த நிலையில் நேற்றுஷிம்லாவிலுள்ள காங்கிரஸ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குக் காரணங்கள் என்ன என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார்.

கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங், மாநில காங்கிரஸ் தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல குஜராத் மாநிலத்துக்கும் ராகுல் சென்று ஆய்வு நடத்தினார் என் பது குறிப்பிடத்தக்கது. - ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 mins ago

ஆன்மிகம்

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்