செல்ஃபி மோகத்தால் இளைஞர் பலி: மிதித்துக் கொன்ற காட்டு யானை

By ஐஏஎன்எஸ்

 

உலகில் பெருகி வரும் செல்ஃபி மோகத்துக்கு ஒடிசாவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக பலியானார். காட்டு யானையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மோகம் வெகுவாக அவரை செலுத்த யானையை நெருங்கிய போது மிதித்ததில் பரிதாபமாகப் பலியானார்.

ஒடிசா மாநிலம், ஆங்குல் மாவட்டத்தில் கமார் வனப்பகுதி சரகத்தில் கோயில் அருகே காட்டு யானை புகுந்தது, கிராம மக்கள் அந்த யானையை காட்டுக்குள் அனுப்புமாறு விரட்டி வந்தனர். அப்போது செல்ஃபி எடுப்பதற்காக ஜெயகிருஷ்ணா நாயக் என்பவர் உக்கிரமாக இருந்த யானையின் அருகில் சென்ற போது மிதிபட்டு பலியானார்.

ஜெயகிருஷ்ணா நாயக் என்பவர் பல்லாஹரா பகுதியின் கீழ் வரும் நிமிடிபேதா கிராமத்தைச் சேர்ந்தவராவார்.

கிராம மக்களுடன் காட்டிலாகா அதிகாரிகளும் யானையை அதன் கூட்டத்துக்குள் அனுப்ப விரட்டியடித்தனர். இதில் செல்ஃபி மோகத்தால் நாயக் சிக்கி பரிதாபமாக பலியானார்.

பயங்கரக் காயமடைந்த நிலையில் நாயக்கை அருகில் உள்ள கமார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாயக் பரிதாபமாக உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

சினிமா

41 mins ago

க்ரைம்

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

35 mins ago

தொழில்நுட்பம்

17 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்