நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு சட்ட மசோதா அறிமுகம்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற மற்றும் 24 உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளத்தை 2 மடங்குக்கு மேல் அதிகரிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டு சட்டமாக மாறியவுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாதச் சம்பளம் தற்போதைய ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2.80 லட்சமாக உயரும். இதுபோல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயரும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாக உயரும்.

7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2016, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும். இதனால் ஓய்வுபெற்ற 2,500 நீதிபதிகளும் இதனால் பலன் பெறுவர்.

2017 ஜூலை 1 முதல் வீட்டு வாடகைப் படியும் செப்டம்பர் 22 முதல் செலவின படியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கான சம்பள உயர்வு குறித்து கடந்த 2016-ல் அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 31 ஆகும். தற்போது 25 நீதிபதிகளே உள்ளனர். 24 உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1,079 ஆகும். ஆனால் தற்போது 682 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 mins ago

தமிழகம்

31 mins ago

கல்வி

51 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்