நிதிமோசடி வழக்கு: டீஸ்டா தம்பதி மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சமூக சேவகியான டீஸ்டா செடல்வாட் தனது தொண்டு அமைப்புகள் மூலம் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டினார். அந்த நிதியை தங்கள் சொந்த உபயோகங்களுக்கு டீஸ்டா செடல்வாட் தம்பதியினர் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் கோடிக்கணக்கான ரூபாயை தங்கள் சொந்த உபயோகத்துக்கு அவர்கள் பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து, டீஸ்டா செடல்வாட், அவரது கணவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து டீஸ்டா செடல்வாட்டும் அவரது கணவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்