ரயான் பள்ளி கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை வயது வந்த குற்றவாளியாக விசாரணை

By அசோக் குமார்

டெல்லி, ரயான் பள்ளியில் சிறுவனைக் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 வயது சிறுவன் வயது வந்த குற்றவாளியாகவே விசாரிக்கப்படுவார் என்று சிறார் நீதிவாரியம் தெரிவித்துள்ளது.

கொலையுண்ட சிறுவனின் தந்தையின் கோரிக்கையை ஏற்று குற்றம்சாட்டப்பட்டவர் வயது வந்த குற்றவாளியாகக் கருதப்பட்டு டிசம்பர் 22-ம் தேதி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

கொலையுண்ட சிறுவன் தந்தை சார்பாக வாதாடும் வழக்கறிஞர் சுஷில் தேக்ரிவால், இந்த முடிவை ‘திருப்பு முனை’ என்று வர்ணித்துள்ளார். “குற்றம்சாட்டப்பட்ட 16 வயது பையனை வயது வந்த நபராகவே விசாரிக்கப்படுவார் என்பது வரலாற்று முடிவாகும். தற்போது இவரை அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்த வேண்டும், அங்கு சம்பந்தமுள்ள சிறார் அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வழக்கு மாற்றப்படும்” என்றார் தேக்ரிவால்.

இதனால் இவர் குற்றவாளி என்று தீர்ப்பானால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் விடுதலையாவார் என்பது கிடையாது, 14 ஆண்டுகள் சிறையில் அடைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது குற்றவாளிக்கு 16 வயதே ஆகிறது என்கிற படியால் 21 வயது வரை நோக்கு இல்லத்தில் வைக்கப்படுவார் என்கிறார் வழக்கறிஞர் தேக்ரிவால்.

கொலையுண்ட சிறுவனின் தந்தை தன் கோரிக்கையில், தன் மகனின் தொண்டை அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட விதம் பயங்கரமானது, நினைத்தாலே குலைநடுங்குகிறது என்று குறிப்பிட்டதையடுத்து இவர் கோரிக்கை ஏற்கப்பட்டு கொலைக் குற்றம்சாட்டப்பட்ட 16 வயது நபர் வயது வந்தவராகவே விசாரிக்கப்படவிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்