குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டு கால வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி ஏன் பேசுவதில்லை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி

By பிடிஐ

வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டிருந்தார். அப்போது பிரதமர் மோடியை பல இடங்களில் விமர்சித்தார். வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்பான எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் ட்விட்டரில் ராகுல் காந்தி கூறும்போது, “பிரதமர் மோடி பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரது தேர்தல் பிரச்சார பேச்சுகளில் குஜராத் வளர்ச்சி என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. அது ஏன்?

குஜராத்தின் வளர்ச்சி தொடர்பாக நான் இதுவரை 10 கேள்விகளை எழுப்பியிருந்தேன். ஆனால் ஒன்றுக்கு கூட இதுவரை பதில் வரவில்லை. 22 ஆண்டுகளாக குஜராத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆனால் வளர்ச்சி மட்டும் ஏற்படவில்லை. குஜராத் பேரவைத் தேர்தல் முதல்கட்ட பிரச்சாரம் நிறைவடையும் வரை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவே இல்லை.

அப்படி என்றால் வளர்ச்சி என்பது வெறும் வாய் வார்த்தையில் மட்டும்தானா?

பாஜகவைப் பொறுத்தவரை வாக்குறுதிகளை மட்டுமே அள்ளித் தெளித்து வருகிறது. ஆனால் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று பதான் மாவட்டம் ஹரிஜ் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் பேசும்போது, “நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக மோடி அரசு எதையும் செய்யவில்லை. விளம்பரங்களுக்காக மட்டும் இதுவரை ரூ.3,700 கோடியை செலவு செய்துள்ளது பாஜக அரசு. அனைத்து பணமும் அவரது புகழை பறை சாற்றிக் கொள்ளவே பயன்படுகிறது. ஆனால் காங்கிரஸ் அரசு வந்தால் மக்கள் பணம், மக்களின் சுகாதார நலனுக்கும், கல்விக்கும் பயன்படுத்தப்படும்.

நர்மதை நதி நீர் திட்டத்தை நிறைவேற்றியதை வைத்து வாக்குகளைப் பெறுவேன் என்று மோடி கூறினார். அந்த நதி நீர் டாடா நானோ தொழிற்சாலைக்குச் சென்றுவிட்டது. மக்கள் இந்த உண்மையை புரிந்துகொண்டனர். ஏழை விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்து டாட்டா நானோ தொழிற்சாலையிடம் கொடுத்தவர்தான் மோடி” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்