31 சாட்டிலைட்டை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

By செய்திப்பிரிவு

வரும் ஜனவரி 10-ம் தேதி 31 சாட்டிலைட்டுகளுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் மூலம் 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1 செயற்கைக்கோளை சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. அந்த தோல்விக்கான காரணங்கள் ஆராயப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் அப்போது தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வரும் 10-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-40 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதில் 28 செயற்கைக்கோள்கள் பின்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவை என்று இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

34 mins ago

வாழ்வியல்

43 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்