ஆர்எஸ்எஸ் தலைவரை அழைத்த கேரள பள்ளி மீது நடவடிக்கை: முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

By செய்திப்பிரிவு

சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு அழைப்பு விடுத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரளா முதல்வர் பினராயி விஜயன் உத்தர விட்டுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் கர்ணகேயமன் என்ற அரசு உதவிப் பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், வரும் ஜனவரி 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கேரளாவில், சுதந்திர தினத்தன்று அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என்றும், மக்கள் பிரதிநிதிகளை வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம் எனவும் அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட கர்ணகேயமன் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேற்று உத்தரவிட்டார்.

பாஜக கண்டனம்: இதுகுறித்து மாநில பாஜக பொதுச் செயலாளர் எம்.டி. ரமேஷ் கூறியதாவது: சம்பந்தப்பட்ட பள்ளியானது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமானது. எனவேதான், அவர்கள் மோகன் பாகவத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். மேலும், ஆர்எஸ்எஸ் என்பது ஓர் அரசியல் இயக்கமும் கிடையாது. இந்த விவகாரத்ததை முதல்வர் பினராயி விஜயன், அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.

இவ்வாறு எம்.டி. ரமேஷ் தெரிவித்தார். - ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்