மீனவர்களை தொடர்ந்து தேடுங்கள்: கப்பல், விமானப் படைக்கு கேரள அரசு வேண்டுகோள்

By பிடிஐ

‘‘ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை, இன்னும் 10 நாட்களுக்குத் தொடர்ந்து தேட வேண்டும்’’ என்று கப்பல் படை, கடலோர காவல் படை, விமானப் படைக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒக்கி புயலில் சிக்கி கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் காணாமல் போயினர்.

இந்நிலையில், கேரளாவில் காணாமல் போன மீனவர்களை இன்னும் 10 நாட்களுக்கு தேட வேண்டும் என்று மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தென் பிராந்திய கப்பல் படை அட்மிரல் ஆர்.நட்கர்னி, விமானப் படை மார்ஷல் ராகேஷ் குமார் சிங், மும்பை கடலோர காவல் படை கமாண்டர் கூடுதல் இயக்குநர் ஜெனரல் கே.நடராஜன் ஆகியோருக்கு கேரள தலைமை செயலர் கே.எம்.ஆப்ரகாம் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்து மீனவர்கள் குறித்து பேச உள்ளார். அப்போது, கேரள மீனவர்களை மீட்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்த அமைச்சரிடம் பினராயி விஜயன் கேட்டுக் கொள்ள உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்