மதுராவில் பகவத் கீதை ஆராய்ச்சி நிறுவனம்

By பிடிஐ

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பகவத் கீதை ஆராய்ச்சி நிறுவனத்தை மாநில அரசு அமைக்கவுள்ளது.

இத்தகவலை மதப் பணிகள் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் லஷ்மி நாராயண் சவுத்ரி நேற்று மதுரா நகரில் தெரிவித்தார்.

மதுரா அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 144-வது ஆண்டு விழாவில் அவர் பேசும்போது, “கிருஷ்ணர் வாழ்ந்த காலத்து வாய்ப்பாட்டு, இசைக்கலை, நாட்டியக் கலை போன்றவை தொடர்பாக ஆராய்ச்சிகளில் ஈடுபடவே இந்த பகவத் கீதை ஆராய்ச்சி நிறுவனத்தை உத்தரபிரதேச அரசு அமைக்க வுள்ளது.

உலகத்தில் உள்ள மொழிகளில் பிரிஜ் பாஷா மொழியைப் போல இனிதான மொழி எங்கும் இல்லை. அதைப் போலவே மதுராவில் உள்ள கலையம்சங்கள் போல எங்கும் இல்லை. ஆனால் அந்த அரிய பொக்கிஷங்களை பிரபலப்படுத்த யாரும் முயற்சி எடுக்காதது துரதிருஷ்டம்தான். அதற்காகவே தற்போது பகவத் கீதை ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்கவுள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்