சக்தி மில்ஸ் பலாத்கார வழக்கு: 2 சிறார் குற்றவாளிகளை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவு

By செய்திப்பிரிவு

2013ஆம் ஆண்டு மும்பை, சக்தி மில்ஸ் வளாகத்தில் நடந்த இருவேறு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக சிறார் நீதி வாரியம் 2 சிறார்களை குற்றவாளிகள் என்று அறிவித்து, இருவரையும் நாசிக்கில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இருவரும் கொடும் குற்றம் இழைத்தவர்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகம் வாதாடினார், ஆனால் சட்டத்தின் கீழ் இதுதான் அதிகபட்ச தண்டனை, ஆகவே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டனர் என்றார் அவர்.

பெண் புகைப்பட பத்திரிகையாளர் பாலியல் பாலியல் பலாத்கார வழக்கில் ஒருவரும், அதே வளாகத்தில் பெண் தொலைபேசி ஆபரேட்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மற்றொருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 22, 2013-ல் சக்தி மில்ஸ் வளாகத்தில் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவரை அவரது நண்பரின் கண்ணெதிரில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலீம் அன்சாரி, சிராஜ் ரஹ்மான் என்ற நால்வர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இந்தப் புகார் பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்கள் கழித்து சக்தி மில்ஸ் வளாகத்தில் ஜூலை மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் டெலிபோன் ஆபரேட்டர் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஷாலினி பான்சல்கர் ஜோஷி, 3 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி மற்றும் சலீம் அன்சாரி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்