அரசியலில் இருந்து சோனியா ஓய்வு பெறவில்லை: காங்கிரஸ் விளக்கம்

By செய்திப்பிரிவு

அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெறவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

சோனியா காந்தியின் உடல் நலம் சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கடந்த திங்கள்கிழமை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவராக இன்று அவர் முறைப்படி பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த சோனியா காந்தியிடம், ‘ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிவிட்ட பின் உங்கள் பங்கு என்ன?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘என் பங்களிப்பு ஓய்வு பெறுவதுதான்’’ என சோனியா பதிலளித்தார். இதைத் தொடர்ந்து அரசியலில் இருந்து சோனியா ஓய்வு பெறுகிறார் என்று செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘சோனியா காந்தியின் கருத்து பற்றி ஊடக நண்பர்கள் தவறான, மறைமுகமான விமர்சனங்களை நம்ப வேண்டாம். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துதான் சோனியா காந்தி ஓய்வு பெறுகிறாரே தவிர, அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. காங்கிரஸ் கொள்கை கள் மீதான அவரது பிடிப்பும் ஆசியும், ஆழ்ந்த அறிவும் எங்களுக்கு எப்போதும் வழிகாட்டும் விளக்காக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

மேலும்