பாஜகவில் இணைந்தார் இந்தி நடிகர் ராகுல் ராய்

By செய்திப்பிரிவு

இந்தி நடிகர் ராகுல் ராய் (வயது 49) இன்று (சனிக்கிழமை) பாஜகவில் இணைந்தார்.

பிரபல இந்தி நடிகரான ராகுல் ராய் டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் ராகுல் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் சரியான முறையில் நாட்டை வழி நடத்தி செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. பாஜகவில் இணைந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன்’’ எனக் கூறினார்.

இதை தொடர்ந்து பத்மாவதி திரைப்பட சர்ச்சை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் ‘‘வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதேசமயம் வரலாறும் மிக முக்கியமானது. பன்சாலி மிகச்சிறந்த படைப்பாளி. எனவே இந்த பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்’’ எனக்கூறினார்.

ஜூனுன் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் ராகுல் ராய். 1990களில், 22 வயதில் இவர் நடித்த ஆஷிக்யூ பெரும் வெற்றி பெற்றது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

க்ரைம்

19 mins ago

வர்த்தக உலகம்

43 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்