லாலு பிரசாத் யாதவின் பாதுகாப்பு குறைப்பு

By செய்திப்பிரிவு

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு அளிக்கப்பட்டிருந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு, ‘இசட்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய் உள்ளிட்ட பிரிவுகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு, அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி முக்கிய தலைவர்களின் பாதுகாப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது.

லாலு பிரசாத் யாதவுக்கு ‘இசட் பிளஸ்’ பிரிவின் கீழ் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இது தற்போது ‘இசட்’ பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் லாலுக்கு கறுப்புப் பூனைப் படைக்கு பதிலாக இனி சிஆர்பிஎப் கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கும்.

பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு இனி மாநில போலீஸார் பாதுகாப்பு அளிப்பார்கள். மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் ஹரிபாய் பி. சவுத்ரிக்கு வழங்கப்பட்டிருந்த ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்