தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தனியார் துறையிலும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தி உள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதிஷ் குமார், கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது, “இப்போது அரசுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதுபோல தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து தேசிய அளவில் மீண்டும் விவாதம் நடத்த வேண்டும். பொருளாதார தாராளமயமாக்கல் அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனில் சமூக நீதி என்பது கேலிக்கூத்தாகி விடும்.” என்றார்.

அரசு பணிகளை அயல் பணி (அவுட்சோர்சிங்) ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் நிறுவனங்கள், பணியாளர் நியமனத்தின்போது இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற திட்டத்துக்கு நிதிஷ் தலைமையிலான அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில்தான் முதல்வர் நிதிஷ் குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிஹார் அமைச்சரவையின் சமீபத்திய முடிவின்படி, அரசின் இட ஒதுக்கீடு முறையை தனியார் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அரசு பணிகளை அயல் பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் நிறுவனங்கள், இனி, எஸ்சி 16%, எஸ்டி 1%, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் 18% மற்றும் ஓபிசி-க்கு 12% என பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்