2ஜி வழக்கு தீர்ப்பு தேதி டிசம்பர் 5-க்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதியை சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது.

இந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் தயாராகாததால், டிசம்பர் 5ம் தேதிக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு நீதிபதி ஓ.பி. சைனி முன்பு இன்று (நவம்பர் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறுகையில்

‘‘இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அவற்றை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாகவும் பரிசீலிக்க வேண்டிவுள்ளது. தீர்ப்பை தயார் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று வார கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது‘‘ எனக்கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்