கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை: கேரளப் பெண் ஹாதியா மறுப்பு

By யு.ஹிரன்

இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் ஷெஃபின் ஜஹன் என் கணவர் நான் அவருடன் வாழ விரும்புகிறேன் என்று ஹாதியா தெரிவித்துள்ளார்.

மதம் மாறுவதற்கு முன் அகிலா என்ற பெயர் இவருக்கு, இப்போது ஹாதியாவான இவர் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இஸ்லாம் மதத்துக்கு மாறு என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, ஷெபின் ஜஹன் என் கணவர், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். நான் முஸ்லிம், எனக்கு நீதி வேண்டும்” என்று கொச்சி விமானநிலையத்தில் கூறினார்.

போலீஸார் அவரை செய்தியாளர்களிடம் பேசக்க்கூடாது என்று தடைசெய்து பார்த்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்காக தன் பெற்றோர் மற்றும் 5 போலீஸாருடன் இவர் கொச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.

நவம்பர் 27-ம் தேதி இவரது வழக்கு விசாரணைக்கு வருகிறது. விமான நிலையத்துக்கு இவர் கடும் பாதுகாப்புகளுடன் அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக...

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலாவுக்கும் (24) ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காகவே அகிலா தனது பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார். ஆனால் ஷபின் ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே திருமணம் செய்து கொண்டதாகவும் அசோகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

கேரளாவில் முஸ்லிம் இளைஞர்கள் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில், வேறு மதத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை தீவிரவாத அமைப்புக்கு பயன்படுத்துவதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன. இந்நிலையில் அசோகனின் இந்தக் குற்றச்சாட்டும் முக்கியத்துவம் பெற்றது.

இதனிடையே, தனது மகளை மீட்டு தரக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணத்தை கடந்த மே 24-ம் தேதி ரத்து செய்தது. மேலும் அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உத்தரவிட்டது.

ஹதியாவிடம் விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என என்ஐஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால், அக்.30 அன்று ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி ஆஜர்படுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்