இந்துத்துவ அமைப்பினரின் கடும் எதிர்ப்பை மீறி கர்நாடகாவில் இன்று திப்பு ஜெயந்தி: குடகு, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றம்

By இரா.வினோத்

‘மைசூரு புலி' என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை (நவம்பர் 10) திப்பு ஜெயந்தி என்ற பெயரில் கர்நாடக அரசு கடந்த 3 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது. இதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் திட்டமிட்டபடி இன்று பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் இவ்விழா நடைபெறும்.

பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம்உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இவ்விழாவுக்கு தடை விதிக்குமாறு ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர் மஞ்சுநாத் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து நேற்று பெங்களூரு, மங்களூருஉள்ளிட்ட இடங்களில் இந்துத்துவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்