ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கு சதானந்த கவுடா பரிந்துரை

By செய்திப்பிரிவு

ரயில்வே துறையின் பணப் பற்றாக்குறையைப் போக்கி உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்க ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா முன்மொழிந்துள்ளார்.

இதற்கானக் கொள்கைகளைத் தளர்த்த நாடாளுமன்றம் வழிவகைகள் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

மக்களவையில் இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசும்போது, "ரயில்வே துறையில் வளர்ச்சி என்பது உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முதலீடு செய்யப்படுவதைப் பொறுத்தே அமையும்.

ரயில்வே துறை வருவாய் மற்றும் அரசு நிதியுதவி ஆகியவை வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்காது. எனவே ரயில்வே துறை அமைச்சகம் அன்னிய நேரடி முதலீட்டிற்கு கொள்கைகளை எளிதாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திடம் கேட்டுக் கொள்ளவிருக்கிறது” என்றார்.

ஆனால் ரயில்கள் இயக்கப்படுவதில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

தனியார் - பொதுத்துறை - கூட்டுறவு ரயில்வே துறைக்கு போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டித் தருவதில் வெற்றியடையவில்லை, ஆகவே எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், இந்த தனியார் - பொதுத்துறை - கூட்டுறவுத் திட்டத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்று தாம் கருதுவ்தாகவும், பல எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்ற இந்த முறையிலேயே முதலீடு வரவேற்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

உதாரணமாக, அதிவேக ரயில்கள், புல்லட் ரயில்களுக்கு அதிக முதலீடுத் தேவைப்படும் அதற்கு தனியார் -பொதுத்துறை - கூட்டுறவு மூலம் நிதிதிரட்டுவதே சுலபமான வழி என்று அவர் தெளிவுபடுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

25 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்