வானொலி நிகழ்ச்சியில் பேச யோசனை கேட்கிறார் பிரதமர்

By செய்திப்பிரிவு

வரும் 26-ம் தேதி ஒலிபரப்பாகும் ‘மன் கி பாத் (மனதில் இருந்து)’ நிகழ்ச்சிக்கு யோசனைகளை பகிர்ந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எண்ணங்களை வானொலியில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் எந்த முக்கியமான பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்பதை மக்களிடமே கேட்டு வானொலியில் பிரதமர் பேசி வருகிறார். அகில இந்திய வானொலியும் தூர்தர்ஷன் நேஷனல், தூர்தர்ஷன் நியூஸ் ஆகிய சேனல்களும் இதை ஒலிபரப்பி வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாக உள்ள ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு உங்கள் யோசனைகள் என்ன? நரேந்திர மோடி மொபைல் செயலியில் (பதிவிறக்க முகவரி http://nm4.in/dnldapp) என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

MyGov இணைய தளமும் இந்த அழைப்பை விடுத்துள்ளது. “மன் கி பாத் 38-வது நிகழ்ச்சியில் எந்த தலைப்பில் தான் பேசவேண்டும் என்பதற்கு பிரதமர் உங்கள் யோசனையை பெற விரும்புகிறார். பிரதமர் எந்தப் பிரச்சினை பற்றி பேச வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அதை தெரிவியுங்கள். ஆங்கிலம் அல்லது இந்தியில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவு செய்யும் கருத்தின் ஒரு பகுதியும் ஒலிபரப்பாக வாய்ப்புள்ளது.

1922 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். மிஸ்டு கால் கொடுத்த பின் வரும் எஸ்எம்எஸ்-ல் உள்ள லிங்க் மூலம் உங்கள் பரிந்துரைகளை தெரிவிக்கலாம்” என்று அந்த இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.

- ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

விளையாட்டு

1 min ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்