திருப்பதியில் தள்ளுமுள்ளு: பக்தர்கள் காயம்

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. நேற்று மதியம் 1.30 மணியளவில், கோயிலின் உட்புற வரிசையில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க சென்று கொண்டிருந்தனர். அப்போது பக்தர்களைச் சோதனையிடும் இடத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதில் தமிழகம், கர்நாடக பக்தர்கள் சிலர் பாதிக்கப்பட்டனர். ‘ஷாக்’ அடித்ததும் பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி யில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தள்ளுமுள்ளுவில் பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். இவர்கள் தேவஸ்தான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்