ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, ஒருவருக்கு வேலைவாய்ப்பு - கலிங்கா குழுமம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் கலிங்கா கல்வி குழுமம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது.

இதன் கீழ் பள்ளிக்கூடம் முதல் நிகர்நிலை பல்கலைக்கழகம் வரை பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நாட்டின் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான இது பல்வேறு மனிதாபிமான உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.

அந்த வகையில் கரோனாபெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த கல்விக் குழுமத்தின் நிறுவனர் அச்யுதா சமந்தா நேற்று முன்தினம் கூறியதாவது: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குவருத்தம் தெரிவித்துக் கொள்வதுடன் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யப் போகிறோம்.

குடும்பத்தில் ஒருவருக்கு..: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் எங்கள் கல்வி நிறுவனங்களில் வேலை வழங்கப்படும். மேலும் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்