தேர்தல் ஆணையம் ஒரு பல் இல்லாத புலி- பாஜக எம்.பி. வருண் காந்தி விமர்சனம்

By பிடிஐ

தேர்தல் ஆணையம் ஒரு 'பல் இல்லாத புலி' என பாஜக எம்.பி. வருண் காந்தி விமர்சித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை அன்று உரை நிகழ்த்திய வருண் காந்தி, ''தேர்தல் ஆணையம் 'ஒரு பல் இல்லாத புலி' என்று கூறினார்.

இதுவரை, குறித்த நேரத்தில் தேர்தல் செலவினங்களை சமர்ப்பிக்காத எந்த ஒரு கட்சியையும் அவ்வாணையம் தகுதி நீக்கம் செய்ததில்லை. இதுவொரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு, தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தித் தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பு தேர்தல் ஆணையம் என்கிறது. ஆனால் அச்செயல்பாட்டை உண்மையிலேயே ஆணையம் மேற்கொள்கிறதா?

தேர்தல்கள் முடிந்தவுடன் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இதற்கு இருப்பதில்லை. அதற்காக உச்ச நீதிமன்றத்தையே தேர்தல் ஆணையம் அணுக வேண்டியிருக்கிறது.

அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் செலவினங்களை தாமதமாகத்தான் சமர்ப்பிக்கின்றன. ஒரே ஒருமுறை பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி மட்டுமே உரிய நேரத்தில் செலவினங்களை சமர்ப்பிக்காததால் அங்கீகாரத்தை இழந்தது. அக்கட்சி செலவினத்தைத் தாக்கல் செய்தவுடன் அதே நாளில் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது'' என்று விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்