ஜிஎஸ்எல்வி-எஃப்14 மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. வானிலை மாற்றத்தை துல்லியமாக ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர்.

இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று (பிப்.16) மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது.

விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பயணித்த நிலையில் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து,விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இன்சாட்-3டிஎஸ் பயன்கள்: இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் உள்ள 6 சேனல் இமேஜர் உள்ளிட்ட 25 விதமான ஆய்வு கருவிகள், பூமியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து, வானிலை தகவல்களை வழங்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பதை 2 நாட்களுக்கு முன்பே கண்டறிய முடியும்.

அதேபோல புயல் கரையை கடக்கும் இடத்தை சுமார் 20 கிலோ மீட்டர் துல்லியத்தில் கண்டறிய முடியும். மேலும், பேரிடர் காலங்களில் காற்றில் ஏற்படும் மாற்றங்கள், புயலின் மாற்றங்களை துல்லியமாக அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டோசாட்-2 விடுவிப்பு: இதற்கிடையே, புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ கடந்த 2007-ல் விண்ணில் செலுத்திய கார்டோசாட்-2 செயற்கைக்கோள், பூமியில் இருந்து 635 கிமீ தொலைவில் பூமியை வலம் வந்தவாறு நகர்ப்புற திட்டமிடல் செயல்பாடுகளுக்கு தேவையான படங்களை எடுத்து அனுப்பியது. அதன் பயன்பாடு முடிந்ததால், அதில் இருந்த எரிபொருளை பயன்படுத்தி கடந்த 14-ம் தேதி மாலை 3.48 மணி அளவில் புவி வட்டப்பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்குள் விழவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

கல்வி

18 mins ago

தமிழகம்

34 mins ago

வேலை வாய்ப்பு

57 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்