201 - கம்பம்

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சையதுகான் அதிமுக
கம்பம் என். ராமகிருஷ்ணன் திமுக
பி.சுரேஷ் அமமுக
வேத வேண்ட்கடேஷ் மக்கள் நீதி மய்யம்
அ.அனீஸ் பாத்திமா நாம் தமிழர் கட்சி

மேற்கு தொடர்ச்சி மலையினால் சூழப்பட்ட கம்பம் சட்டப்பேரவை தொகுதி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 391 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பள்ளதாக்கில் அமைந்துள்ளதால் இதனை கம்பம் பள்ளதாக்கு என்றழைக்கப்படுகிறது. இந்த தொகுதியில் கம்பம், சின்னமனுர் என இரு நகராட்சிகளும், உத்தமபாளையம், சின்னமனு£ர் என இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும் அமைந்துள்ளதோடு, கோம்பை, தேவாரம் உத்தமபாளையம், பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி, கே.புதுப்பட்டி, ஓடைப்பட்டி என பேரூராட்சிகள் உள்ளது.

இந்த தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதிகளாக உள்ளன. நெல், திராட்சை, வாழை முக்கிய சாகுபடியாக உள்ளது. ஆடு, மாடுகள் வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. தமிழக-, கேரள எல்லையில் இந்த தொகுதி அமைந்துள்ளதால் தொகுதி மக்களில் பலர் கேரளத்தில் உள்ள காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். கம்பம் தொகுதிகளில் விளைவிக்கப்படும் தக்காளி, பீட்ரூட், பீன்ஸ், அவரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளில் 48சதவீதம் கேரளத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. உத்தமபாளையம் காளாத்தீவரர் கோவில் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படுகிறது. இது சிறந்த ஆன்மீக தளமாக உள்ளது. முக்குலத்தோர், கவுண்டர், தாழ்த்தப்பட்டோர், இஸ்லாமியர்கள், நாடார், நாயுடு உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

தமிழகத்தையும் கேரளத்தினையும் இணைக்கும் சாக்குலூத்து மெட்டுச்சாலை திட்டம், திண்டுக்கல்-லோயர்கேம்ப் ரயில்சேவை திட்டம், திராட்சை பதனிடும் தொழிற்சாலை, நெல்கொள்முதல் நிலையங்கள், 18ம் கால்வாயில் நீர்திறப்பை 120நாட்களாக அதிகரித்தல் ஆகியவை பல ஆண்டு கோரிக்கையாக உள்ளன.

கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் நீதிக்கட்சி 1, காங்கிரஸ் 2, திமுக 4, மதிமுக 1, தமாக 2, அதிமுக 4, வெற்றி பெற்றுள்ளது. 2009-ம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டிலும் இவரே வென்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,29,234

பெண்

1,33,463

மூன்றாம் பாலினத்தவர்

25

மொத்த வாக்காளர்கள்

2,62,722

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ்.டி.கே.ஜக்கையன்

அதிமுக

2

என்.ராமகிருஷ்ணன்

திமுக

3

ஓ.ஆர்.ராமச்சந்திரன்

தமாகா

4

பி.பொன்காசிகண்ணன்

பாமக

5

என்.பிரபாகரன்

பாஜக

6

என்.ஜெயபால்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

உத்தமபாளையம் தாலுகா (பகுதி), தேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம் இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை வருவாய்க் கிராமங்கள் மற்றும் தேவாரம் (பேரூராட்சி), பண்ணைப்புரம் (பேரூராட்சி), கோம்பை (பேரூராட்சி), உத்தமபாளையம் (பேரூராட்சி),அனுமந்தன்பட்டி (பேரூராட்சி), க.புதுப்பட்டி (பேரூராட்சி), கம்பம் (நகராட்சி), சின்னமனூர் (நகராட்சி) மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி).

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

N. ராமகிருஷ்ணன்

திமுக

2006

N. ராமகிருஷ்ணன்

மதிமுக

43.24

2001

O.R. ராமச்சந்திரன்

த.மா.கா

50.73

1996

O.R. ராமச்சந்திரன்

த.மா.கா

54.66

1991

O.R. ராமச்சந்திரன்

இ.தே.கா

57.21

1989

ராமகிருஷ்ணன்

திமுக

46.17

1984

S.சுப்புராயர்

அதிமுக

52.17

1980

R.T.கோபாலன்

அதிமுக

49.2

1977

R.சந்திரசேகரன்

அதிமுக

41.5

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

N. ராமக்கிருஷ்ணன்

ம.தி.மு.க

50761

2

P. செல்வேந்தரன்

தி.மு.க

48803

3

A. ஜெகநாத்

தி.மு.தி.க

12360

4

A. சக்திவேல்

பா.ஜா.க

2162

5

N. விலங்குமணி

சுயேச்சை

749

6

R. செந்தில் குமார்

அனைத்திந்திய பார்வர்டு பிளாக்

710

7

S. பழனிச்சாமி

சுயேச்சை

601

8

S. ஈஸ்வரன்

பகுஜன்

506

9

R. அம்பிகா

சுயேச்சை

176

10

T.செல்வராஜ்

சுயேச்சை

159

11

V.கேசவன்

சுயேச்சை

148

12

N.K.P.P.S. கான் சாஹிப்

சுயேச்சை

139

13

A. ராஜ்குமாரி

சுயேச்சை

116

117390

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

N. ராமகிருஷ்ணன்

தி.மு.க

80307

2

P. முருகேசன்

தே.மு தி.க

68139

3

R. அப்பாஸ் மந்திரி

சுயேச்சை

6205

4

P. பிரகாஷ்

சுயேச்சை

2478

5

P. லோகன் துரை

பா.ஜ.க

2431

6

P. முருகேசன்

சுயேச்சை

1637

7

A. அந்தோனி வேதமுத்து

ஐஜேகே

980

8

R. ராஜாமோகன் எ செந்தில்

எல்எஸ்பி

929

9

V. சரவணன்

பகுஜன்

840

10

M. ரவிச்சந்திரன்

சுயேச்சை

541

11

N. ராஜ்மோகன்

பிபிஐஎஸ்

381

12

G. சிவகுமார்

சுயேச்சை

251

13

P. கிருஷ்ணக்குமார்

சுயேச்சை

202

165321

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்