விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் பழனிசாமி: தொகுதி ஒதுக்கீடு இறுதியாகிறதா?

By செய்திப்பிரிவு

முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்தார்.

நீண்ட இழுபறி மற்றும் காலதாமதத்துக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், பாமக - தேமுதிக இரு கட்சிகளும் ஒரே தொகுதிகளைக் கேட்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பாமக தலைவர் ஜி.கே.மணி, நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்தனர். அப்போது தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசியதாகத் தகவல் வெளியானது. மேலும், நேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விஜயகாந்தைச் சந்தித்தார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும், தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை. அதனை இறுதி செய்வதற்காகவே முதல்வர் நேரில் விஜயகாந்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்