ஜாக்டோ-ஜியோ வாக்குகளை அறுவடை செய்யப் போவது யார்?

By என்.கணேஷ்ராஜ்

மக்களவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம், 21 மாத நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து போராட்டத்தை ஒடுக்கியது. கடைசி வரை அரசு அழைத்து பேசாதது ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. தேர்தலின்போது தங்களின் உணர்வுகளை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்துவோம் என்று கூறிவிட்டு அப்போதைக்கு அமைதியாகி விட்டனர்.

தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக இறங்கி உள்ளது. திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளன.

இது குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சுமார் 13 லட்சம் பேர் இருக்கிறோம். ஒரு வீட்டில் குறைந்தது 4 வாக்குகளாவது இருக்கும். போராட்டத்தை அரசு ஒடுக்கிய விதம் குடும்பத் தினருக்கு நன்றாகவே தெரியும். எங்கள் உணர்வுகள் வாக்குகளில் பிரதிபலிக்கும். மொத்த வாக்கு களில் 10 சதவீதம் மாறிப் போனாலும், மீதம் உள்ள வாக் குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். பல்வேறு கட்சிகளும் வாக்குறுதிகள் அளித்து வருகின்றன. தேர்தல் நெருங்கும்போது எங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வாக்களிப்போம் என்றனர். இருப்பினும் தேர்தல் நெருங்கும்போதுதான், அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த ஆதரவு எந்த அணிக்கு என்பது தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

சுற்றுலா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்