ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியா? - தலைமை அறிவிக்கும் முன்பே தண்டோராவால் திமுகவில் கொந்தளிப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான திமுக கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் உரிமையாளர் கா. நவாஸ் கனியை முன்னிறுத்தி அறிமுகக் கூட்டம் நடந்துள்ளதால் அம்மாவட்ட திமுகவினர் கொந்த ளிப்பில் உள்ளனர்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப் படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், திமுக கூட்டணியில் வேட்பாளர்களின் நேர்காணல் நடக்கும் முன்பே ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தான் ஒதுக்கப்படும் என்றும், எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் உரிமையாளர் கா. நவாஸ்கனிதான் வேட்பாளர் என்றும் பிரச்சார பேனர், நோட்டீஸ்களை தயாரித்து சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண் டர்கள் வரை பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சியில் அனுபவமிக்க மூத்த தலைவர்கள் இருக்கும்போது, நேற்று வந்த நவாஸ்கனிக்கு எந்த அடிப்படையில் சீட் ஒதுக்கப்படுகிறது. கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களின் போதும் முஸ்லிம் லீக் சார்பாக தொழில் அதிபர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படுவதேன் என அவர்கள் கோபமாக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் திங்கட்கிழமை மாலை ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா. நவாஸ்கனியின் அறிமுகக் கூட்டம் நடந்துள்ளது.

கட்சித் தலைமை வேட்பாளரை அறிமுகப்படுத்தும் முன்பே அறிமுகக் கூட்டம் என்று சம்பந்தமே இல்லாமல் சென்னையில் கூட்டம் நடத்துகின்றனர். இதில் கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுவிக் கப்படவில்லை. இதுதான் கூட்ட ணிக்கும், கூட்டணித் தலைவரான ஸ்டாலினுக்கும் முஸ்லீம் லீக் தரும் மரியாதையா என ராமநாதபுரம் திமுகவினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

29 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்