பாஜக மேலிட சிபாரிசில் சிவகங்கையை கைப்பற்றிய எச்.ராஜா

By இ.ஜெகநாதன்

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் சிவகங்கையும் ஒன்று. இதனால், அமைச்சர் பாஸ்கரன் தனது மகன் கருணாகரனுக்காகவும், தற்போதைய எம்.பி. செந்தில்நாதனும் இத்தொகுதியைப் பெற தீவிரமாக முயற்சித்து வந்தனர்.

பாஜகவும் சிவகங்கையை கேட்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அமைச்சரும், எம்.பி.யும் ஒன்றுசேர்ந்து தங்களது ஆதரவாளர்களுடன் சென்னையில் முகாமிட்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.

ஆனால், அதிமுக மேலிடம் சிவகங்கையை கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியபோது, ‘‘பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடப்போவதால், சிவகங்கை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குமாறு டெல்லி பாஜக மேலிடமே நேரடியாக அதிமுகவிடம் கேட்டுள்ளது. அதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் கேட்கும் தொகுதியை தருவதாக கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமை சமாதானம் செய்துள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்