காங். அதிருப்தி எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனை- கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மீண்டும் சிக்கல்

By இரா.வினோத்

கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் நேற்று ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதனால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும்தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்தனர். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்த வாபஸை திரும்ப பெற்றனர்.

முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. குமாரசாமியின் ஆட்சி நிலைக்குமா? என சந்தேகம் எழுந்த நிலையில், அவர் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான உமேஷ் ஜாதவ் நேற்றுமுன் தினம் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் ஏற்கக் கூடாது என காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உமேஷ் ஜாதவ் தனது ராஜினாமாவை திரும்ப பெற மறுத்துவிட்டார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணையவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே நேற்று பெங்களூருவில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மகேஷ் குமடஹள்ளி, நாகேந்திரா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சர், வாரியத் தலைவர் பதவி தராத கூட்டணி அரசுக்கு எதிராக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆலோசனையால் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மஜத - காங்கிரஸ் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, முதல்வர் குமாரசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்