சிரஞ்சீவியின் மற்றொரு தம்பி ஜனசேனா கட்சியில் இணைந்தார்- நரசாபுரம் தொகுதியில் போட்டி

By செய்திப்பிரிவு

நடிகர் சிரஞ்சீவியின் குடும் பத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ‘மெகா’ குடும்பம் என அழைக் கின்றனர். இந்த மெகா குடும் பத்தின் முன்னோடியான சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் கட்சியை 2008-ம் ஆண்டு தொடங்கி 18 பேரவை தொகுதி களில் வெற்றி பெற்றார். ஆனால், அவர் அதன் பின்னர் அக்கட்சியை கலைத்து விட்டு, காங்கிரஸ் கட்சியுடன் அக்கட்சியை இணைத்து, மத் திய அமைச்சரானார். தற் போது அரசியிலில் இருந்து ஒதுங்கி உள்ளார் சிரஞ்சீவி.

இந்நிலையில், ஜனசேனா கட்சியை தொடங்கிய சிரஞ் சீவியின் 2வது தம்பியும் நடிகருமான பவன் கல்யாண், இம்முறை கம்யூனிஸ்ட் கட்சி களுடன் இணைந்து ஆந்திரா வில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க உள்ளார். இவர் இம் முறை 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடு வதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சிரஞ்சீவி க்கு தம்பியும், பவன் கல் யாணுக்கு அண்ணனும் நடிகருமான நாகபாபுவும் அரசியலில் குதித்துள்ளார். நேற்று அவர், தனது தம்பி பவன் கல்யாணை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர், ஜனசேனா கட்சியில் இணைந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு கோதாவரி மாவட்டம், நரசாபுரம் தொகுதியில் நாகபாபு போட்டியிட உள்ளார். இதற்கான பி - பாரத்தை பவன் கல்யாண், நாகபாபுவிடம் வழங்கினார்.

இதுகுறித்து நாகபாபு கூறும்போது, “உறவு முறை யில் எனது தம்பியே ஆனா லும், எனது தலைவர் பவன் கல்யாண்தான். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே நான் அரசியல் பிரவேசம் செய்தேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்