நாகை மக்களவைத் தொகுதி

By நெல்லை ஜெனா

மத்திய மாவட்டங்களில் உள்ள ரிசர்வ் தொகுதி நாகை. கடலோரப்பகுதியும், காவிரி டெல்டாவின் விவசாயப் பகுதியையும் ஓருங்கிணைத்துக் கொண்ட தொகுதி இது. தமிழகத்திலேயே அதிகஅளவு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ள பகுதி. நாகையில் மீனவர்கள் வாக்கு வங்கியும் கணிசமாக உள்ளது.

பெரிய தொழில்கள் ஏதும் இல்லாத இந்த தொகுதியில், விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. காவிரி நீரை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த தொகுதியில் உள்ளனர்.

அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு வாக்கு வங்கி உண்டு. நீண்டகாலமாகவே இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் மாறி மாறி வென்றுள்ளன.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இருந்தபோது கூடுதல் வாக்கு வித்தியாசத்துடன் வென்றுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய திருவாரூர் தொகுதியும், நாகை மக்களவையில் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட இடங்களில் பாமகவுக்கும் வாக்குகள் உள்ளன. இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன. மற்றபடி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாத தொகுதி இது.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

நாகபட்டினம்

கீழ்வேளூர்

வேதாரண்யம்

திருத்துறைப்பூண்டி

திருவாரூர்

நன்னிலம்

 

 

தற்போதைய எம்.பி

கோபால், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

 

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுககோபால்434174
திமுகவிஜயன்328095
சிபிஐபழனிசாமி90313
பாமகவடிவேல் ராவணன்43506
காங்கிரஸ்செந்தில்பாண்டியன்23967

            

                  

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டு   வென்றவர்  2ம் இடம்
1971காத்தமுத்து, சிபிஐசபாசிவம், ஸ்தாபன காங்
1977முருகையன், சிபிஐகருணாநிதி, திமுக
1980கருணாநிதி, திமுகமுருகையன், சிபிஐ
1980 (இடைத்தேர்தல்)முருகையன், சிபிஐமகாலிங்கம், அதிமுக
1984மகாலிங்கம், அதிமுகமுருகையன், சிபிஐ
1989செல்வராசு, சிபிஐ  வீரமுரசு, காங்
1991பத்மா, காங்கிரஸ்செல்வராசு, சிபிஐ
1996செல்வராசு, சிபிஐகனிவண்ணன், காங்
1998  செல்வராசு, சிபிஐ  கோபால், அதிமுக
1999  விஜயன், திமுகசெல்வராசு, சிபிஐ
2004விஜயன், திமுகஅருச்சுனன், அதிமுக
2009விஜயன், திமுகசெல்வராசு, சிபிஐ

             

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

நாகபட்டினம்         : தமிமுன் அன்சாரி, அதிமுக

கீழ்வேளூர்           : மதிவாணன், திமுக

வேதாரண்யம்        : ஓ.எஸ். மணியன், அதிமுக

திருத்துறைப்பூண்டி   : ஆடலரசன், திமுக

திருவாரூர்           : மு. கருணாநிதி, திமுக

நன்னிலம்            : காமராஜ், அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

தாழை ம.சரவணன் (அதிமுக)

எம்.செல்வராசு (இந்திய கம்யூனிஸ்ட்)

செங்கொடி (அமமுக)

கே. குருவையா (மநீம)

மாலதி ( நாம் தமிழர்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

26 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்