மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

By நெல்லை ஜெனா

தலைக்காவிரியில் புறப்பட்டு தமிழகம் முழுவதும் செழிக்க வைக்கும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதி இது. காவிரி பாசன விவசாய பகுதியான இந்த தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக கொண்டு இயங்குகிறது.

பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் விவசாயமே இந்த பகுதியின் உயிர் மூச்சு. காவிரி ஆறு பல பகுதிகளில் பாய்ந்து வடக்கு கடைமடைப்பகுதியை கொண்டது இந்த தொகுதி. இதனால் காவிரிக்கான போராட்டம் தீவிரமாக இருக்கும் இடம்.

அரசியலை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்த தொகுதி. வழக்கமாகவே காங்கிரஸ் பாரம்பரிய தொகுதியாகவே இருந்துள்ளது. எனினும் அதிமுக மற்றும் திமுகவின்  ஆதரவுடனேயே காங்கிரஸ் அதிகமுறை  வென்றுள்ளது. பாமகவுக்கு ஒரளவு வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. கடந்த 2 தேர்தல்களாக இந்த தொகுதியில் அதிமுகவின் காற்று வீசி வருகிறது.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

மயிலாடுதுறை

கும்பகோணம்

பாபநாசம்

திருவிடைமருதூர்

சீர்காழி

பூம்புகார்

 

தற்போதைய எம்.பி

பாரதி மோகன், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

 

கட்சி            வேட்பாளர்வாக்குகள் 
அதிமுகபாரதி மோகன்513729
மனிதநேய மக்கள் கட்சிஹைதர் அலி236679
பாமகஅகோரம்144085
காங்மணிசங்கர் அய்யர்58465

                                                  

                         

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டுவென்றவர்  2ம் இடம்
1977குடந்தை ராமலிங்கம், காங்கோவிந்தசாமி, ஸ்தாபன காங்
1980குடந்தை ராமலிங்கம், காங்     கோவிந்தசாமி, ஸ்தாபன காங்
1984பக்கீர் முகமது ஹாஜி, காங்கல்யாணம், திமுக
1989பக்கீர் முகமது ஹாஜி, காங்கல்யாணம், திமுக
1991மணிசங்கர் அய்யர், காங்குத்தாலம் கல்யாணம்,திமுக
1996  ராஜேந்திரன், தமாகா     மணிசங்கர் அய்யர், காங்
1998கிருஷ்ணமூர்த்தி, தமாகாஅருள்மொழி, பாமக
1999மணிசங்கர் அய்யர், காங் அருள்மொழி, பாமக
2004மணிசங்கர் அய்யர், காங்ஓ.எஸ்.மணியன், அதிமுக
2009ஓ.எஸ்.மணியன், அதிமுகமணிசங்கர் அய்யர். காங்

                 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

மயிலாடுதுறை       : ராதாகிருஷ்ணன், அதிமுக

கும்பகோணம்        : அன்பழகன், திமுக

பாபநாசம்            : துரைக்கண்ணு, அதிமுக

திருவிடைமருதூர்    : கோவி. செழியன், திமுக

சீர்காழி              : பாரதி, அதிமுக

பூம்புகார்             : பவுன்ராஜ், அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

எஸ்.ஆசைமணி (அதிமுக)

செ. இராமலிங்கம் (திமுக)

எஸ் செந்தமிழன் (அமமுக)

ரிஃபாயுதீன் (மநீம)

சுபாஷினி (நாம் தமிழர்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

50 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்