கள நிலவரம்: திண்டுக்கல் தொகுதி யாருக்கு?

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக, பாமக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம்ஆகிய கட்சிளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருந்தபோதும் திமுக வேட்பாளர் வேலுச்சாமி, பாமக வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோரிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரக் களத்தில் இருந்தபோதும் வெற்றிபெறுவதற்கான வாக்குகளைப் பெறுவது சிரமம்.

திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய மாநில துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, திமுக கொறடா அர.சக்கரபாணிஆகியோர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். பாமக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வனத்துறைஅமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் தேர்தல் பணியாற்றுகின்றனர்.

நிலக்கோட்டை இடைத்தேர்தல் நடப்பதால்அங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய அதிமுகவினர் அதிக கவனம் செலுத்துவதால் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளரின் பிரச்சாரத்தில் தொய்வு காணப்படுகிறது.

தொகுதியை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்கியதால் தொண்டர்கள் சோர்ந்துபோய் உள்ளனர். அதிமுகவின் வாக்குகளை அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் பிரிப்பார் என்பதாலும், ஏற்கெனவே திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு திமுக எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதாலும் அவர்களின் பணியால் திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கே தற்போது வரை தொகுதி சாதகமாக உள்ளது.

இதுவரை நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக அதிக முறை வலம் வந்தது. ஆனால், இந்த முறை அத்தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியது. இது அதிமுகவினரிடையே சோர்வையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. திமுகவின் ப.வேலுச்சாமி முதலிடம் வகிக்கிறார். பாமகவின் ஜோதிமுத்து 2-ம் இடம் வகிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் மன்சூர் அலிகான் 3-ம் இடத்தில் உள்ளார்.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்பின்படி திருச்சி தொகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு வெற்றி முகம். அவருக்கு அடுத்த இடத்தில் அமமுகவின் சாருபாலா தொண்டைமான் உள்ளார். 3-வது இடத்தில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனும், நாம் தமிழர் கட்சியின் வினோத்தும் உள்ளனர்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamaden

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

28 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

36 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

42 mins ago

ஆன்மிகம்

52 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்