126 - மடத்துக்குளம்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதி. கடந்த 2011-ல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது பழைய உடுமலை தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதி உருவானது. உடுமலை ஒன்றிய பகுதியில் உள்ள 35 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் உள்ளன. வாழை, கரும்பு, நெல், தென்னை, தக்காளி, வெங்காயம், கீரை வகைகள், மக்காச்சோளம், வெற்றிலை, பட்டுக்கூடு உள்ளிட்டவை விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. மடத்துக்குளம் ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலங்கள் அமராவதி அணையின் பாசனத்தையே நம்பி உள்ளது. மேற்கு பகுதியான உடுமலை ஒன்றிய பகுதிகள் முழுவதும் பரம்பிகுளம் ஆழியார் (பிஏபி) பாசனத்தை நம்பியே உள்ளது. 1952-ல் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இது இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. தமிழகத்திலேயே அமராவதி நகரில் மட்டுமே மத்திய அரசின் ராணுவப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

பல்வேறு சிறப்புகள் இருந்த போதும், இரு அணைகளிலும் சேறு, சகதி நிறைந்து காணப்படுவதால் தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. அதனால் ஆண்டுதோறும் பல டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. இவற்றை தூர்வார வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. ராணுவப் பள்ளி இருப்பதால், அதன் அருகிலேயே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

அமராவதி சர்க்கரை ஆலை, நிர்வாக கோளாறுகளால் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. அவற்றை தரம் உயர்த்தவும், லாபத்தில் இயக்க வேண்டும் என்பது கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இத்தொகுதிக்கு உட்பட்ட மருள்பட்டியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுமார் 400 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள் புதர் மண்டி கிடக்கிறது.

திருமூர்த்தி அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டம் பல கிராமங்களுக்கும் சென்று சேரவில்லை. அமராவதி ஆற்றின் நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக விநியோகிக்கப்படுவதாக புகார் உள்ளது. இத்தொகுதியில் வசிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்காக உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பழநி போன்ற நகரங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இத்தொகுதியில், அரசு கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி கட்டவேண்டும்.

மடத்துக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், அடிப்படை வசதிகள் இல்லை. பிஏபி யின் கால்வாயில் தொடரும் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையின் அபிவிருத்தி திட்டத்தில், பருவமழை காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். 18 மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், தொகுப்பு வீடுகள் அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

இத்தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினரான சி.சண்முகவேலு ஏற்கனவே 2 முறை உடுமலை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். 2011-ல் குறைந்த காலம் மட்டுமே தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.மனோகரன்

அதிமுக

2

இரா.ஜெயராமகிருஷ்ணன்

திமுக

3

எ.எஸ்.மகேஸ்வரி

தமாகா

4

அ.ரவிச்சந்திரன்

பாமக

5

அ.முத்துக்குமார்

பாஜக இமகமுகழகம்



29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,11,548

பெண்

1,13,815

மூன்றாம் பாலினத்தவர்

14

மொத்த வாக்காளர்கள்

2,25,377



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

உடுமலைப்பேட்டை தாலுக்கா (பகுதி)

செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெருயபாப்பனூத்து, சின்னப்பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு போதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோடை, மனுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி,

அமராவதி (ஆர்.எப்), ஆனைமலை (ஆர்.எப்), குதிரையார், குக்கல் (ஆர்.எப்) மற்றும் கஞ்சம்பட்டி (ஆர்.எப்), கொமாரலிங்கம் (பேரூராட்சி), தளி (பேரூராட்சி), கணியூர் (பேரூராட்சி) மற்றும் கணக்கம்பாளையம் (சென்சஸ் டவுன்).

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சண்முகவேலு.C

அதிமுக

78622

2

சாமிநாதன்.M.P

திமுக

58953

3

வரதராஜன்.D

சுயேச்சை

1742

4

விஜயராகவன்.R

பாஜக

1166

5

நந்தகுமார்.P

சுயேச்சை

946

6

சடையப்பன்.S

சுயேச்சை

739

7

ராதாகிருஷ்ணன்.S

பகுஜன் சமாஜ் கட்சி

598

8

தங்கவேல்.N

சுயேச்சை

289

9

சுப்ரமணியம்.P

சுயேச்சை

289

10

சாமிநாதன்.T

சுயேச்சை

218

11

கந்தசாமி.M

சுயேச்சை

141

143703

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

3 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்