பிற நாடுகளில் கட்சி நிதிக்குக் கணக்கு எப்படி?

By சி.ஹரி

வேட்பாளர் செலவுக்கு உச்ச வரம்பு, கட்சிகளின் செலவுக்கும் அவை பெறும் நிதிக்கும் உச்ச வரம்பு ஆகியவைகுறித்த விவாதங்கள் இந்தியாவில் சூடுபிடித்திருக்கும் நேரத்தில், பிற நாடுகளில் இதுகுறித்து இருக்கும் நடைமுறைகளையும் அங்கிருக்கும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளையும் இங்கே பார்க்கலாம்.

அமெரிக்கா

அரசு ஆதரவு:அதிபர் தேர்தலுக்காகக் கட்சிக்குள் வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான பூர்வாங்கத் தேர்வுக்கு அரசு விதித்துள்ள வரம்புக்குள் செலவிட்டிருந்தால் அந்தத் தொகைக்கு ஈடாக அரசு மானியம் வழங்கப்படும்.

வேட்பாளருக்கு அளிக்கப்படும் தனிநபர் நன்கொடை வரம்பு: ஒரு வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 2,600 டாலர் (சுமார் ரூ.1.6 லட்சம்), உச்சபட்சமாக 1,23,200 டாலர்கள் (சுமார் ரூ.75 லட்சம்).

சிவில் சட்டப்படி அபராதங்கள்: அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகள்குறித்து உரிய காலத்தில் தெரிவிக்காமல் காலதாமதமாகத் தெரிவித்தாலோ, அல்லது தெரிவிக்காமலேயே விட்டுவிட்டாலோ அபராதம் செலுத்த வேண்டும்.

நடவடிக்கை: நாட்டின் சட்டத்தை ஏமாற்றி நன்கொடைகளைப் பெற்றாலோ, வெளிநாட்டவரிடமிருந்து தேர்தல் பிரச்சாரத்துக்குப் பணம் பெற்றாலோ கிரிமினல் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பிரிட்டன்

அரசு ஆதரவு: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள எல்லா கட்சிகளுக்கும் ஆண்டுதோறும் 20 லட்சம் பவுண்டுகள் (சுமார் 20 கோடி ரூபாய்).

அரசியல் கட்சிகள் வானொலி, தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்துகொள்ளலாம், அஞ்சல் கட்டணத்திலிருந்து விலக்கு, பொதுக் கட்டிடங்களில் இலவசமாகக் கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம், பெரும் செல்வந்தர்களின் வாரிசுகள் தங்களுக்குக் கிடைக்கும் சொத்து அல்லது பணத்திலிருந்து ஒரு பகுதியை அரசியல் கட்சிகளுக்குக் கொடையாக அளித்தால், அதற்கு உண்டான தொகை வரியிலிருந்து கழித்துக்கொள்ளப்படும்.

தனிநபர் நன்கொடை: வேட்பாளர்களோ அரசியல் கட்சிகளோ எவ்வளவு நன்கொடைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் தடை: 50 பவுண்டுகளுக்கு (சுமார் ரூ. 5,000) அதிகமாக நன்கொடை தருவதாக இருந்தால், தருபவர் பிரிட்டனில் வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவு செய்துகொண்டவராக இருக்க வேண்டும். பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம், தொழிற்சங்கம், கட்டிட சங்கம் போன்ற அமைப்புகள் நன்கொடை தரலாம். மற்றவர்கள் நன்கொடை தரக் கூடாது.

தேர்தல் செலவுக்குக் கட்டுப்பாடுகள்: ஊரகப் பகுதிகளில் வேட்பாளர்கள் அதிகபட்சம் 7,150 பவுண்டுகள் (சுமார் ரூ. 7 லட்சம்) செலவிடலாம். தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தலைக்கு 5 பென்ஸ் (சுமார் ரூ. 5) வீதம் செலவிடலாம். அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனியாக 30,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 30 லட்சம்) செலவிடலாம்.

சிவில் சட்டப்படி அபராதங்கள்: அனுமதிக்கப்படாத தரப்புகளிலிருந்து நன்கொடை பெற்றால் அபராதம் விதிக்கப்படும். ஊழல் வழிகளைக் கடைப்பிடிப்பதாக நிரூபிக்கப்பட்டால், வாக்களிக்கும் உரிமை நிறுத்திவைப்பு, நிரந்தரமாகத் தகுதியிழப்பு, போட்டியிடும் உரிமை ரத்து போன்ற தண்டனைகள் விதிக்கப்படும்.

கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை: தனிநபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்ற விவரங்களை அரசிடம் உரிய காலத்தில் அளிக்காமல் தாமதப்படுத்தினாலோ, தெரிவிக்காமலேயே விட்டுவிட்டாலோ, பதிப்பாளர் பெயரைப் போடாமல் தேர்தல்காலப் பிரசுரங்களை விநியோகித்தாலோ கிரிமினல் சட்டப்படி தண்டனைகள் வழங்கப்படும்.

கனடா

அரசு ஆதரவு: சில தேர்தல் செலவுகளை அரசு ஈடுகட்டும். வாக்காளர்கள் தரும் நன்கொடைகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். வானொலி, தொலைக்காட்சிகளில் இலவசப் பிரச்சாரம், வாக்காளர் பட்டியல் இலவசம். தேர்தல் செலவுக்கும் தேர்தல் நன்கொடைகளுக்கும் வரம்பு உண்டு. தனிநபர்கள் ஓராண்டில் அதிகபட்சம் 4,400 டாலர்கள் (சுமார் ரூ. 2.5 லட்சம்) கொடுக்கலாம். கட்சிக்கு அல்லது ஒரு வேட்பாளருக்கு அதிகபட்சம் 1,100 டாலர்கள் (சுமார் ரூ. 66,000) கொடுக்கலாம்.

யாருக்கெல்லாம் தடை: கனடா நாட்டுக் குடிமக்கள் அல்லது நிரந்தரமாக வசிப்போர் மட்டுமே நன்கொடை தரலாம். நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் நன்கொடை தரக் கூடாது.

செலவுக்குக் கட்டுப்பாடுகள்: ஒவ்வொரு தொகுதிக்கும் அதிகபட்சம் 4,002 டாலர்கள் (சுமார் ரூ. 2.2 லட்சம்) மட்டும் செலவிடலாம். தேசிய அளவில் பிரச்சாரத்துக்கு ஒரு வேட்பாளருக்கு, 'மூன்றாவது நபர்' அதிகபட்சம் 2,00,100 டாலர்கள் (சுமார் ரூ. 1 கோடி) செலவிடலாம்.

பிரான்ஸ்

அரசு நிதியளிப்பு: அரசியல் கட்சிகளுக்குப் பொது நன்கொடைகளும் தனியார் நன்கொடைகளும் அனுமதிக்கப்படுகிறது.

தனிநபர் தொகைக்குக் கட்டுப்பாடு: அதிகபட்சம் ஒருவர் 4,600 யூரோ டாலர்களை (சுமார் ரூ. 4 லட்சம்) தரலாம்.

நன்கொடைக்குத் தடை: தனிநபர்கள் மட்டுமே தேர்தல் நன்கொடை தரலாம். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

தேர்தல் செலவுக்குக் கட்டுப்பாடுகள்: அதிபர் தேர்தலில் ஒரு கட்சியோ தனிநபரோ முதல் சுற்றில் 16 மில்லியன் யூரோ டாலருக்கு (சுமார் ரூ. 133 கோடி) மிகாமலும், அடுத்த சுற்றில் 20 மில்லியன் யூரோ டாலருக்கு (சுமார் ரூ. 160 கோடி) மிகாமலும் செலவிட வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் அதிகபட்சம் 40,000 யூரோ டாலர்களும் (சுமார் ரூ. 33 லட்சம்), ஒரு வாக்காளருக்கு 0.20 டாலர் (சுமார் ரூ. 16) என்ற கணக்கிலும் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கேற்ப செலவிடலாம்.

சிவில் அபராதம்: தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல்செய்யத் தவறினாலோ, வரம்பை மீறினாலோ தகுதிநீக்கம் செய்யப்படலாம்.

கிரிமினல் அபராதம்: தேர்தல் செலவில் நியதிகள் கடைப்பிடிக்காவிட்டால் அது குற்றச் செயலாகக் கருதப்படும். வரம்பை மீறி எவ்வளவு செலவு செய்தாரோ அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்