திமுக-வின் தயவுக்காக நீலகிரியை கொடுத்த பாஜக: பிரசாந்த் பூஷன்

By செய்திப்பிரிவு

“தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் தயவு தேவைப்படலாம் என்றுதான், நீலகிரியில் பா.ஜ.க. விட்டுக் கொடுத்துள்ளது” என, ஆம் ஆத்மி அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த்பூஷன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நீலகிரியில் பா.ஜ.க. வேட்பாளர் வேட்பு மனுவில் வேண்டுமென்றே ‘பி’ பார்மை இணைக்கவில்லை. இது திட்டமிட்ட சதி. பா.ஜ.க.வுக்கு தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் தயவு தேவைப்படலாம் என்றுதான் இப்படி செய்துள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி 5 முதல் 7 தொகுதிகள் வரை வெற்றி பெறும்.

பா.ஜ.க. வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து வருகின்றனர். இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் செயல். கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு இந்திய அரசு தேர்தல் நேரத்தில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றது. இதில், பணம் கைமாறியிருக்கலாம் என சந்தேகிக்கிறேன், என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்