மதுரை ஆதீனத்தை கோமாளியாகத்தான் பார்க்கிறேன்: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பேட்டி

By செய்திப்பிரிவு

ஆதீனத்தை நான் கோமாளியாகத்தான் பார்க்கிறேன் என்று இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் தெரிவித்தார்.

கோவையில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை மாற்ற வேண்டும். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி மாநிலத்தையே மாற்றிக் காட்டியுள்ளவர். தேசிய அளவிலும் அவர் மாற்றங்களைக் கொண்டு வருவார். எனவே இந்து முன்னணி மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது என்றார்.

அவர் மேலும் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோயில் அமைய மோடி ஆவன செய்ய வேண்டும், பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும், 370 சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீர் மாநிலத்தை காக்க வேண்டும், மதமாற்றத் தடைச் சட்டம், தமிழ்நாடு நீர்வழித்திட்டம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். ராமர் பாலத்தை முழு மூச்சாக காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாங்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. இந்துக்களுக்கு ஆதரவான அரசு மாநிலத்திலும் மையத்திலும் ஏற்பட பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

அதிமுக.வுக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் பிரச்சாரம் செய்வது குறித்து அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்தை நான் கோமாளியாகத்தான் பார்க்கிறேன். தனிப்பட்ட முறையில் உளறும்போது அவரை யாரும் கவனிக்கவில்லை. அவரும் நித்தியானந்தாவும் அடித்த கூத்துகளுக்கு அளவேயில்லை. அவரது ஆதரவுக்கு என்ன மதிப்பு, மரியாதை எனத் தெரியவில்லை. அவர் ஆதீனத்தின் மதிப்பையே கொச்சைப்படுத்திவிட்டார் என்றார்.

கோவையில் பேட்டி அளிக்கிறார் ராம கோபாலன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

41 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்