அதிமுக ஆட்சியில் தள்ளாடும் தமிழகம்: வைகோ

By செய்திப்பிரிவு

‘தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மதுக்கடைகளின் எண்ணிக்கையால் தமிழகம் தள்ளாடுகிறது’ என, வைகோ குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி மதிமுக வேட் பாளர் ஜோயலை ஆதரித்து, கோவில்பட்டியில் செவ்வாய்க் கிழமை பிரச்சாரம் செய்த வைகோ பேசியதாவது: மதுக்கடைகளை ஒழிக்க வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டேன். தமிழ்நாட்டில் காமராஜர், ராஜாஜி, பக்தவத்சலம், அண்ணா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் மதுக்கடைகள் கிடை யாது. கருணாநிதி ஆட்சியில்தான் திறக்கப்பட்டன.

ஜெயலலிதா தனது ஆட்சியில் மதுக்கடைகளை 10 மடங்காக அதிகரித்து, தமிழகத்தை பாழாக்கி வருகிறார்

நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு

குஜராத்தில் குடிநீர் பிரச்சி னையை 6 மாதத்தில் மோடி தீர்த்து வைத்தார். ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்தா லும் மதுக்கடைகளை திறக்க மாட்டேன் என்று மோடி கூறியுள் ளார். அவர் பிரதமராக வந்தால் நதிநீர் பிரச்சினைகள் நிச்சயமாக தீர்க்கப்படும். தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத் தொழில் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப் பார். மோடி அலையால் தமிழ் நாட்டில் திமுக; அ.தி.மு.க. அலை இல்லாமல் போய்விட்டது. அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்