93 வயது வேட்பாளர் ராம் சுந்தர் தாஸ்: ராம் விலாஸ் பாஸ்வானுடன் மீண்டும் போட்டி

By செய்திப்பிரிவு

இந்த மக்களவைத் தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர் களிலேயே மிகவும் வயதானவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராம் சுந்தர் தாஸ் (93). தள்ளாத வயதிலும் இவர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பிஹார் மாநில முன்னாள் முதல்வரும் ஹாஜிபூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான தாஸ், கடந்த தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானை 37,954 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தத் தேர்தலிலும் இதே தொகுதி யில் இருவரும் மோதுகின்றனர்.

இவர்கள் தவிர, காங்கிரஸ் சார்பில் சஞ்சீவ் பிரசாத் தோனி, பகுஜன் சமாஜ் சார்பில் தனேஷ்வர் ராம், சமாஜ்வாதி கட்சியின் வீர்சந்திர பாஸ்வான் உள்ளிட்டோரும் இந்தத் தொகுதி யில் போட்டியிடுகின்றனர். இங்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜனநாயகம் என்பது கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து. இது வரும் ஆண்டுகளிலும் தழைத்தோங்கும். இதைவிட மேலான முறை எதுவும் இல்லை. அனைத்து தேசிய கட்சிகளும் பிராந்திய கட்சிகளாக மாறி விட்டன. சுயநலம் காரணமாக கட்சிகளின் கொள்கைகளும் மாறிவிட்டன" என்றார். இவர் கடந்த 1991-ல் முதன்முறையாக மக்களவை உறுப்பினரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்