இது எம் மேடை: ஒருங்கிணைந்த சாயப் பூங்கா அமைக்க வேண்டும்

By செய்திப்பிரிவு

அட்லஸ் எம்.நாச்சிமுத்து - கரூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் மற்றும் கரூர் ஜவுளிப் பூங்கா தலைவர்:

கரூரில் தயாரிக்கப்படும் மேஜை விரிப்பு, திரைச்சீலை, படுக்கை விரிப்பு, தலையணை உறை, குஷன் உறை உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ரஷ்யா, சீனா, அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, கரூரில் மட்டும் சுமார் 500 ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை மூலம் ஆண்டுக்குச் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு ஜவுளிகள் ஏற்றுமதியாகின்றன.

கரூரில் 500 சாயப் பட்டறைகள் இயங்கிவந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவால் 450 சாயப் பட்டறைகள் மூடப்பட்டன. இதனால், சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நூல்களுக்குச் சாயமிடுவதற்காக நாமக்கல், கொமாரபாளையம், ஈரோடு, திருப்பூர் என அலைகின்றனர். அந்த மாவட்டங்களிலும் ஜவுளிகளுக்குச் சாயமிட கடும் கெடுபிடிகள் நிலவுகின்றன. வெளிநாடுகளில் பெறும் ஜவுளி ஏற்றுமதி ஆர்டரை ஒருமுறை தாமதமாக அனுப்பினாலோ அல்லது அனுப்பாமல் விட்டாலோ மீண்டும் ஆர்டர் கிடைப்பது மிகுந்த சிரமம். ஆனால், சாயப் பட்டறைகள் முடக்கத்தால், நேரத்துக்கு ஜவுளிகளைத் தயார் செய்து ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

சாயப் பட்டறை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கரூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த சாயப் பூங்கா அமைக்க வேண்டும். சாயப் பட்டறைகளுக்குச் சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

உலகம்

33 mins ago

வணிகம்

50 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்