என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

By செய்திப்பிரிவு

ஏ.ஆர். மலையப்பசாமி- கௌரவத் தலைவர், தமிழ்நாடு. (ஹைடென்சிட்டி பாலி எத்திலின்) கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்கம்:

பொதுவாக, ஏழைகள்தான் கொசுவலைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்களைப் பாதிக்கும் கொசு வலைக்கான மதிப்புக்கூட்டு வரியை நீக்க வேண்டும். இந்தத் தொழில் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கொசுவலை உற்பத்தி மூலப்பொருளான ஹைடென்சிட்டி பாலி எத்திலின் எனப்படும் பிளாஸ்டிக் குருணை எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப்பொருள் விலை உயர்வுக்குக் கால நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலை. பழனியப்பன் - திருக்குறள் பேரவைச் செயலர் மற்றும் சமூக ஆர்வலர்.

இங்கு சாயப் பட்டறைகள் முடக்கம்குறித்தோ, அமராவதி நதி நீர் மாசுபடுவது குறித்தோ எம்.பி. கவனம் செலுத்துவதில்லை. மூன்று முறை எம்.பி-யாக இருந்தும், இந்தப் பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், பெரிய தொழிற்சாலைகளோ அல்லது பெரிய திட்டங்களோ கொண்டுவரவில்லை. அதேபோல், தொகுதியின் நீண்ட காலக் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மற்றும் விவசாயக் கல்லூரிகள் கொண்டுவரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

22 secs ago

இந்தியா

31 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

44 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்