மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனமும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவிபள்ளிகளில் 9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்மூலமாக மாணவர்களின் புதிய தொழில் கண்டு பிடிப்புகளை ஊக்குவிப்பது, தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பது, தலைமைத்துவ பண்புகளை உருவாக்குதல் போன்றபல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இத் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அறிவியல்ஆசிரியர்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி தரப்படும்.

பயிற்சி ஆசிரியர் தேர்வு

தன்னார்வம் கொண்ட மாணவர்கள், சிறு குழுக்களாகப் பிரிந்து புதிய தொழில் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அதை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன் பின்னர் அவர்களின் கண்டுபிடிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கும், திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகள், மாவட்டங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

எனவே, இந்த பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டுஅனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும் தலா ஒரு ஆசிரியர் வீதம் (அறிவியல் பாடம்) தேர்வு செய்து, அதன் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்