தேசிய நல்லாசிரியர் விருது | தமிழகம், புதுச்சேரியில் தலா ஒரு ஆசிரியர் தேர்வு - ஆளுநர் தமிழிசை வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

அந்த வகையில், நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 46 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தலா ஒருவர் தேர்வாகியுள்ளனர்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கே.ராமச்சந்திரனுக்கு 2022-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் முதலியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவும் தேர்வாகியுள்ளார். டெல்லியில் செப்.5-ம் தேதி நடைபெற உள்ள விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பார்.

ஆளுநர் தமிழிசை வாழ்த்து

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் டி.அரவிந்தராஜா, தமிழகத்தைச் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’’என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்