பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை - 2-ம் சுற்று விண்ணப்பப் பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் சுற்று விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 58 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,440 இடங்கள் உள்ளன.

இதேபோல், பகுதிநேர படிப்புகளுக்கும் 1,025 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு (2022-23) பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கி ஜூலை 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதில் முதலாமாண்டு சேர்க்கைக்கு 19,000 மாணவர்களும், நேரடி 2-ம் ஆண்டுக்கு 15,500 பேரும், பகுதிநேரப் படிப்புகளுக்கு 1,100 பேர் வரையும் விண்ணப்பித்தனர். தற்போது விண்ணப்பித்த மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகள் மூலம் நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது. எனவே, சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்க வேண்டுமெனஉயர்கல்வித் துறை அறிவுறுத்திஇருந்தது.

இதுதவிர சேர்க்கை இடங்களைவிட குறைவான மாணவர்களே விண்ணப்பித்து உள்ளனர். இதையும் கருத்தில் கொண்டு பாலிடெக்னிக் படிப்புகளுக்கான 2-ம் சுற்று விண்ணப்பப் பதிவைதொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் நேற்று முதல் தொடங்கியது. அதன்படி இந்த 2-ம் சுற்று விண்ணப்பப்பதிவை மாணவர்கள் சுயமாக மேற்கொள்ள முடியாது.

தாங்கள் பயில விரும்பும் கல்லூரிகள் மூலமே விண்ணப்பிக்க இயலும். இதற்கான பிரத்யேக வசதிகள் கல்லூரிகளுக்கு ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளன. எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி துரிதமாக கல்லூரிகளுக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 9150486098, 9150496098, 9360099586 ஆகிய எண்களில் தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்